இன்று
ஏன் என்னை கைவிட்டாய்இம்மாபெரும் பிரபஞ்சத்தில்
ஒரு மலர்கூடவா
இல்லை எனக்குத்தர
மலரின் சுகந்தத்தை
வீசக்கூடவா
உனக்கு மனமில்லை
நீ அளித்த
வெறுமையை அல்ல
என் அறைமுழுதும்
இருக்கும் மலர்களுக்கு
மத்தியில்
ஒரு மலரின்மையை
வைக்கிறேன்
ஜன்னல் வழி விழும்
உதயத்தின் கிரணங்கள்
மலர்கிறது மலரின்மையில்
No comments:
Post a Comment