ஆணவத்தின் மனம்கமழும்
சிற்றகல்களை உன் சன்னதியில்
ஏற்றி ஒழிகிறேன்
என்னை பூதகணங்களுள்
ஒன்றாக்கு
உன் ஆயிரம்கால் மண்டபத்தின்
ஒற்றைத்தூணை
அழகுறச் சமைக்கிறேன்
வேறொன்றும்
வேண்டேன்
அருளினும் கொள்ளேன்
அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக