இவ்வளவு
நிகழ்ந்துவிட்டஇந்த நாளை எதுவும்
செய்வதாயில்லை
மைதீர்ந்த பேனாவை
மேஜையில் வைப்பதுப்போல்
வைத்துவிடுகிறேன்
மெல்ல இடம்மாறி
மீண்டும் எழுத எடுக்கப்பட்டு
உதறப்பட்டு
ரீஃபில் வெளிச்சத்தில் பார்க்கப்பட்டு
சில நேரங்களில் பாக்கெட் அமர்ந்து
அலுவல் சென்று கூடத் திரும்பிவிடும்
மீண்டும் எழுத எடுக்கப்பட்டு
எரிச்சலுடன் உதறப்பட்டு
பின்பொருநாள் இந்நாள்
இல்லாமல் ஆகும்
No comments:
Post a Comment