உயிர்த்தின்னும்
சுடலைப்பேயொன்றுபசி பசி என
வந்தது
பசியடக்கு பசியடக்கு
என என்னை நான்
திண்ணக்கொடுத்தபோது
ஒரு கணம் பேய்க்கண்ணால்
திகைத்து நோக்கி
அதிரச் சிரித்து
ஆதிச்சலனம் பிறப்பித்தவை
சலனமோய்வதேயில்லை என்றது
மேலும் சிரித்து
சலனத்தின்
கனவுகளில் பிறந்துகொண்டேயிருக்கிறது
ஆதிக்கும் முன்னான
சலனமின்மை என்றது
No comments:
Post a Comment