ஒரு வருடம்
பன்னிரெண்டு மாதம்மீண்டும் முதல் மாதம்
தொடர்ந்து வரும்
பதினொன்று
பின் மீண்டும்
இப்படியாக
வாங்கிய முதல்மூச்சிலிருந்து
போன மூச்சு திரும்பாதவரை
ஒரு எளிய
கணக்குண்டு
இக்கணக்கை
அவிழ்ப்பவருக்குக்
காட்சியாகும்
வாங்கிய முதல்மூச்சிலிருந்து
போன மூச்சு திரும்பாதவரை
காலக்கணக்கின்
முதல் எண்ணான
இன்ஃபினிட்டி
No comments:
Post a Comment