அதென்ன
அவ்வளவு கனிவுபேரங்கள் அணைஉடைத்து
பெருகும் தெருவில்
கனிவை வைத்து
என்ன செய்வது?
நாய்கள் முன்கால்நீட்டிப்பணிந்து
எஜமானனாய் ஏற்கும்
குழந்தைகள் கண்டு
புன்னகைக்கும்
பாக்கெட்டிலிருந்து
இரண்டு நாணயம் கூடுதல்
இன்னொருவன் பாக்கெடிற்கு போகும்
ஒரு கடைத்தெரு
நிர்மாணிம்கப்படுவது
லாபம் பெருலாபம்
நஷ்டம்
ஏமாறுதல் ஏமாற்றப்படுதல்
சாமர்த்யம் சாதூர்யம்
அறம் பாவம்
இவற்றுடன்
கொஞ்சம் கனிவிற்கும்
இடம் வைத்துத்தான்
கூட்டிக் கழித்துப் பார்க்கையில்
பூமியின் பேரேட்டில்
வரவும் செலவும் சரியாகத்தான்
உள்ளது
No comments:
Post a Comment