இதோ இதுதான் வழி
நேராகச் சென்றுசடலமெனக் கிடக்கும்
ஏரியைக் கடந்தால்
என் வீட்டின் வாசல் வரும்
அதன் வழி வெளியேறிச்
செல்லலாம்
மற்றபடி
பிரிவு
ஏக்கம்
என எதையும் போட்டு
மனதைக் குழப்பிக்கொள்ளாதே
நம் தத்தமது வானங்களில்
விழும் நட்சத்திரங்கள் அறியும்
அவை நொடிக்கணத்தில்
கோடிச் சொல் உதிர்க்கும்
No comments:
Post a Comment