மொட்டை மாடி
கைப்பிடிச்சுவற்றில்வரிசை கட்டின
ஒரு குருவிக் கூட்டம்
ஒன்று சிறகுலைத்தது
மற்றொன்று அலகு திருப்பிற்று
அவை சொல்லின
"பூமி பெரியது"
"வானம் பார் ஆகப்பெரியது"
"காற்றைப் பார் எங்குமுள்ளது"
"நம் உடல் ஆகச் சிறியது"
"பறத்தலொன்றே செய்வதற்குரியது"
சொல் பிறந்தது உன்னில் சொல் சென்றோய்வது உன்னில் இடைப்பட்ட அச்சிறுகாலம் அகலென ஏந்திய சொற்சுடரொளியில் ஆற்றுவிக்கும் கண்ணீர்த்துளியால் ...