டிசெம்பரும்
செப்டம்பரும்ஒரு பூவுடன்
தன்னை
இணைத்துக்கொண்டுவிட்டன
நவம்பர் ரெய்ன் என்று
நடுவில் நிற்பது
மழையுடன்
ஒரு ஆங்கிலப் பாடல்
வழி இணைத்துக்கொண்டது
மீதம் ஒன்பது
மாதம்
தேவை
ஒன்பது
இன்சொல்
பன்னிரெண்டு
இன்சொல்
சேர்ந்து ஒரு
வரியானது
பின் எப்படியோ
ஒரு இன்மையின்
சொல்சேற
காலமானது முடிவற்று
No comments:
Post a Comment