சுயம்பிரகாசம்
மகள் இறக்கவும்ஆளே மாறிப்போனார்
கசங்கிய உடையும்
வைன் ஷாப்களில் தஞ்சமும்
வழக்கமாகிவிட்டது
சற்று முயன்று
நண்பர்கள் விட்டனர்
இன்னும் சற்று முயன்று
குடும்பமும் விட்டது
இலக்கில் துளி சந்தேகமில்லா
மனிதனை யார் என்ன செய்ய?
பின்பொரு நாள் காலம்தான்
'அடடா இந்த ஜீவனை
இப்படி விட்டயிற்றே'
என பிழைக்கு வருந்தி
திசைத்திருப்பிவிட்டது
கோயிலை நோக்கி
தெளிந்தார்
சிரித்தார்
சிறு கசங்கலுமில்லா
ஆடைகளில் பவனி
மகிழ்ந்தது நட்பும் குடும்பமும்
சில நாட்களிலேயே
காலம் 'டைம் ஆய்டுச்சே,
எல்லாம் வயித்துல வாய்ல
அடிச்சுட்டு அழுமே'
என்று யோசித்து,
'ம்ச்.. அடுத்த ரவுன்டில்
பார்த்துக்கொள்ளட்டும்'
அன்று மாலை
ஹாஸ்பிடல் ஃபார்மாலிட்டீஸ்
எல்லாம் முடித்து
ட்ரெஸ்ஸிங் எல்லாம் ஆகி
வந்த போது
இவ்வளவு பிரகாசித்ததேயில்லை
சுயம்பிரகாசம்
காலத்திற்கு ஆச்சர்யம்
'கடைசி நொடியில் எப்படி?
அடுத்த ரவுன்ட் இல்லை..
ஆச்சர்யம்தான்'
இலக்கில் துளி பிசகில்லாத
காலத்தை என்ன செய்ய?
காலத்தை மீறிப்
பிராசிப்பவர்களை
என்னவென்று சொல்ல?
No comments:
Post a Comment