Wednesday, January 8, 2025

உடலெல்லாம் காதல்
வழிந்துக் கிடக்கிறது
சில கதவுகளை
திறந்துவிட்டிருக்கிறேன்
அத்தனை களைப்பையும்
நிரப்பி ஒரு புட்டிலை
உடைத்து வீசினேன்
எங்கிருந்து மீண்டும்
துளிர்ர்கிறது மீள மீள
என்னை பிடித்திழுக்கும்
இக்கண் முன் விழும் திரை
உண்மையின் வன நெருப்பில்
பொசுங்காமல் எஞ்சுவதன்
சாபம் என்னை
பிறவிகளாய் துரத்துகிறது
காதலின் நூறாயிரம்
இழைகளில் நுனி திரண்டு
நிற்கிறது கண்ணீரின் கனம்
காலங்களை புரட்டிப்
புரட்டிப் படிக்கையில்
பிரகாசமான ஓளிதானே
பாயவேண்டும்?
கிரகங்களின் அப்பாலிருக்கும்
அழுத்தமான இருளொன்று
சிறுது நெளிந்தால்
என் காதல் நிலத்தில் ஆவி எழுகிறது
காரணங்களின் தேடலில்
யாரும் பைத்தியமாவதில்லை
உடலொன்று வெடித்து
பறவையாவதை பார்த்தபின்
பெருகிவிடுகிறது
யாரும் யாருகும் கடத்த முடியா
புது ஒளியின் வெடிப்பு

No comments:

Post a Comment

கான் நின்ற மரமொன்று தூணாகி நிற்கும் முற்றத்தில் பல்லாங்குழியாடுகிறாய் வலையொளிக்க நீ இட்ட அரிசி உலை கொதிக்கிறது எத்தனை வளைக்கரம் வழி ...