அங்கங்கு நின்று
மேயும்இந்த ஆட்டின்
பின் சென்றாலும்
போய்ச்சேரலாம்தான்
கழுத்து மணி
சினுங்க சினுங்க
ஓடும் குட்டியின்
பின் ஓடுங்கள்
சற்றே மூச்சிளைத்தாலும்
குட்டி தூரம் சென்றுவிட்டாலும்
வாரி அள்ளும்
ஒளிக்கரங்களை
கண்டுவிடலாம்
அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக