என் குடிலுக்குள்
சிறு செடியை நட்டேன்அது
நீரைக் கொணர்ந்தது
சூரியனைக் கொணர்ந்தது
இரவையும் பகலையும்
கொணர்ந்தது
சில நட்சத்திரங்களையும்
கொணர்ந்தது
விருட்சமானபின்
வான் வேண்டுமென்றது
கிளைவாழ்ப்புள்ளொன்று
இழுத்தும் வந்தது
பின்
ஆனது என் குடில்
வானம் வாழும் குடிலாக
No comments:
Post a Comment