போதும்
சொற்கள் என்றது ஒரு குரல்
கூட்டுக்குள்ளிருந்து
கூடொழிந்தது
பறவை
வானத்தின் கீழ்
கோடிச் சொற்கள்
காத்திருந்தன
ஒற்றைஒரு சொல்தேடி
சிறகிசைத்தது புள்
துளியாய் ஆதியில்
நதி கிடந்தபோது
அது தியானித்ததொரு
சொல்
அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக