வெள்ளி, 22 நவம்பர், 2024

நீ வாங்கிய
முதல் மூச்சு
எப்போதென்றறிவாயா?

கடைசி மூச்சு
எப்போதென்றேனும்
தெரியுமா?

இந்தக் கல்
எப்படி உருவாகி
வந்தது?

இதோ
உன்‌ தோளில்
மலரொன்று உதிரப்போகிறதென்று
அறிவாயா?

மழையின் முதல்துளியை
கண்டவர் உளரா?

மழையின் கடைசித் துளியை
கண்டுகொள்ளமுடியுமா?

அறியாமையின் துளியொன்று
அண்டமெனத் தளும்கிறது
நம் வானங்களில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கல்

உன்னிடம் சொல்வதற்கு எதுவுமில்லை கண்ணே நீரின் மென்னலைவட்டம்போல் விரிந்து கொண்டிருக்கும் என் சிறுகாலங்களில் அடைந்த தெளிவென்பது ஏதுமில்ல...