அறையெல்லாம் மழை
சொட்ட சொட்டஅமர்ந்திருக்கும் என்னிடம்
ஒரு கோடையைப் பற்றிப் பேச
ஒரு கோடையை சுமந்துகொண்டு
வருகிறீர்கள்
வெயிலின் சிறகு
மழைத்திரையை கிழித்துக்கொண்டு
என்னை வந்தடைவதற்குள்
கோடையின் பறவைகள்
மழைக்குள் சென்றுமறைந்தன
மழை
நீங்கள் போனபின்
எஞ்சிய துளி வெயிலைப்பருகி
வண்ணவில் ஒன்றை
செய்துகொண்டது
No comments:
Post a Comment