ஞாயிறு, 8 செப்டம்பர், 2024

காலத்தை அழிப்பது

 சுந்துவுக்கு
தலையில் அடி

ஆட்டோவைக்கூப்பிடு
ஆஸ்பத்திரிக்கு ஓடு

தையலைப்போடு

அழுது கணத்த முகத்துடன்
ஒரு தூக்கத்தைப்போடு

பின் முழித்துக்கொண்ட
சுந்து சிரித்தது
துக்க நெடியெல்லாம்
கலைய ஆஸ்பத்திரியும்
சற்று சிரித்தது

உலகில் ஒரு உயிரும் அறிந்திராத
தூரத்தில் நிற்கும்
தள்ளிவிட்ட சின்னுவை
சுந்து சிறுகரம் நீட்டி
அழைக்கிறது
சின்னு அழுதது

விழுந்து உடைந்த
காலம் அவ்வளவு
குஷியாய் அழிந்து
மறைந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிருஷ்டியின் போக்கு

அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...