நாள் குறித்தாயிற்று
கணம் நொடிக்கூடஃபீட் செய்யப்பட்டுவிட்டது
இந்த பிரம்மாண்டமான
கட்டிடத்தின்
பெதினெட்டாம் தளத்தில்
மூவாயிரம் என
இலக்கமிட்ட அறையில்
ஒரு சின்ன மடிக்கண்ணியில்
ஒரு சொடுக்கு போதும்
தேக்கி வைத்த வன்மம்போல்
கிளம்பிவிடும்
இந்த மிஸைல்
சில மனிதர்களால்
எடுக்கப்பட்ட முடிவுதான்
சரியாக
இந்த நாள்
இந்நொடி
இக்கணத்தில்
உறங்கிக்கொண்டிருக்கும்
ஒரு நகரின் மீது
கருணைவெள்ளமோ
என பார்ப்பரை திகைக்கச்செல்லும்
ஒளியுடன்
ஆதரவற்று சென்று விழும்
பின்
காலம் எல்லாவற்றையும்
துடைத்துத் துப்புறவாக்கி
மீண்டும் அங்கு
ஒரு மலரை மலரச்செய்யும்
குருதி நிற மலர்
No comments:
Post a Comment