Tuesday, December 8, 2015

பெண் மழை

பெண் மழை

மழைக் கர நகக் கூர்மை
சிதைப்பதாய் உள்ளது.
முதன்முறையாக அப்பா அழுவதைக்
காணும் குழந்தையைப் போல
நகர் திகைத்து நிற்கிறது.
குளிரும் மெல்லிய மழைக்கு
எப்படியோ பெண்மையின் உறுதி
கூடிவிட்டிருக்கிறது.
ஆணின் காமம் போல்
வரையறையில்லாததாய்
விவஸ்தைகெட்டதாய்
ஆகிவிட்டிருக்கிறது மழை.
தீமையின் படிகளில் மேலும் ஏறி
மக்களிடையே தொடர்புகளையும்
துண்டித்துவிட்டது.
பெண்ணின் கோபத்தின் முன்
இயலாமையை முழுதுணர்ந்து
ஆணவமழியும் ஆணைப்போல்
இன்று இந்நகர்....மழையின் முன்.

##########

மழை

மழை ஓய்ந்திருக்கிறது
ஒரு ஆன்டி ஹீரோ போல
அமைதியாய் நசநசக்கும் தன் கைகளால்
போதும் எனும் எல்லையைத் தாண்டி
நகர் நிலை குலைய
அதன் உறுப்புக்ளை சிதைத்து
தெருக்களை நிரப்பி
வீட்டுக்குள் ஒரு போலீஸ் போல்
அத்துமீறி நுழைந்து
மனிதர்களை அல்லல்படுத்தி
ஓய்ந்திருக்கிறது.
இனிமை எனும் எல்லையை
கடந்து விட்டிருக்கும் மழையை
மனம் சலித்து ஒதுக்கிவிட்டது.
ஆனால் இன்னும் ஓர் புலன்களை வாட்டும்
வரண்ட கோடை கடந்தால்
மீண்டும் மனம் இதே மழையைத் தான் நாடப்போகிறது  என்பது
பெறும் சலிப்பை அளிக்கிறது.

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...