பெருவிருட்சம் அடர்ந்த
இவ்வனாந்திரத் தனிமையில்இடறி விழ நழுவி
மேலெல்லாம்
நிலவு வழிந்து கிடக்கும்
இப்பொழுதில்
உன்னைப்பற்றியே
நினைத்துக்கொண்டிருக்கிறேன்
வனத்தின் ஏதாந்தத்தின் மேல்
ஒரு சொல்கூட துணையில்லா வானம்
கடலின் ஆழத்தில் எழுகிறது
அழுந்திய காலங்களின் குரலொன்று
நான் என் சின்ன பிரிவை
அவ்வளவு கண்ணீருடன்
அணைத்து இன்புறுகிறேன்
No comments:
Post a Comment