பாலையின் வெயில்
வாட்டும்போதுஉடனிருந்த மழைகுளிரை
நினைத்துக்கொள்கிறேன்
நீர் வெயிலாகிவிடும் பாலையில்
மணற்புயலாய்
என்னைச் சூழ்கிறாய்
கடலென இகம்
சிறு மத்தென அலைப்புறுமனம்
எல்லாம் சலித்தமரும்
நெஞ்சத்தின் பதற்றச் சொடுக்குகள்
இசைக்கின்றன
நின் நாமத்தை
அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக