படித்த கவிதையை
மீண்டும் வாசித்தேன்அன்புக்காக ஏங்கும்
ஒரு சொல்லை சுமந்தபடி
வானம் பார்த்தபோது
இதே போலொரு பால்கனியில்
பத்து வருடம் முன்
இதே போலொரு
அன்புசொல் வாசித்து
வானம் பார்த்தது
அகமெழுந்தது
லேசான திகைப்பின் கணத்தில்
காலம் எனும் சொல்
என் கபாலமுடைத்து உள்நுழைந்தது
ஆயிரம் வருடம் முன்பு
இதே போலொரு காதற்சொல்லை
வாசித்து
இதே வானத்தை பார்த்ததை நினைவுடுத்தியது
காலம் கபாலத்திற்குள் சுழித்தது
பல லட்சம் வருடம் முன்
மாக்கடலில்
ஒலிக்கும் பெருமீனின்
ஏக்கத்தை
வலசைப்பறவையாக
கேட்டுக்கொண்டிருந்தேன்
No comments:
Post a Comment