ஞாயிறு, 1 டிசம்பர், 2024

இரவில்
பெயர் சொல்லக்கூடாதது
என்றாவது ஒரு நாள்
தேடி வரும்
உங்களுகேயான
பிரயத்யேகமான ஒன்று

தூரத்து வனங்களில்
உங்கள் இச்சையின்
அசையாப்பாறை மீது
மிக மெல்லிதாய்
நெளிந்துக்கிடக்கிறது

உண்மையில்
நீங்கள் பதறிப் பின்
ஆசுவாசம் கொண்டதுபோல்
உங்களை தோளுரசியது
தென்னையோலை அல்ல
அதன் நாவின் துடி

பின்பொருகாலம்
விழித்தெழவே முடியாத
கனவொன்றில்
வன்மமே அசைவானதுபோல்
துடித்துத் தீண்டும்
விடமூறிய சதுப்புகளின்
நஞ்சை முறிக்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பெரும் சதுப்பு அசைவறுத்த முதலை அசைவில்லாத பறவை அசைவற்ற நீரில் மிதக்கும் அசைவேதுமற்ற சிறு பூச்சி சதுப்பின் ரீங்காரம் ஊன்றிய கால் வழி ...