Sunday, December 8, 2024

மேஜை வெயிட்டின்
கணத்த கண்ணாடியைப்போல
கெட்டித்துக் கிடக்கிறது
உலையேறவேண்டும்
நெருப்பின் ஜ்வாலை
அள்ளி உண்ணட்டும்
கெட்டித்துப்போன
ஒன்று உறுகி ஓடி
எல்லா நெருப்பையும் போல்
நெருப்பணைந்தபின்
பிசினாய் ஒட்டியுள்ளது
உளி ஒன்றால் தீட்டித்தான்
எடுக்கவேண்டும்
இருக்கும் ஒன்றை
எப்படி இல்லாமல்‌ ஆக்குவது?
இருப்பவை இருப்பவற்றை
அவ்வளவு உறுதியாய்
பற்றிக்கொள்ளும் மாயத்தை
எங்ஙனம் படைத்தாய்?
இல்லாதவற்றின்
கனவில் அனைத்தும்
எப்படி எழுந்தது?

No comments:

Post a Comment

உயர உயரப் பறக்கும் பறவையைக் காணவும் நரம்பொன்று அறுந்து விழுந்தது சுற்றிப் பெருகும் நகரின் பதைக்கும் குரல்கள் கேளாதானேன் நீரில் மிதக்க...