Sunday, December 8, 2024

ஒரு நாள் முச்சூடும்
நீ என்னுடனேயே இருப்பதாய்
ஏன் கற்பனை
செய்துகொள்கிறேன்?
மாஞாலமெங்கும்
அலைகள்  ஏன்
உன் பாறைகளிலேயே
மோதி உடைகிறது?
நான் ஏன்
இல்லாத உன்னிடம்
பேசிக்கொண்டிருக்கிறேன்?
ஒரு சொல்லும் ஒலிக்காத
பிலத்தில் என்
மலர்களை ஏன்
பூஜிக்கவேண்டும்?
இவ்விரவில்
மலைக்கு மேல்
பிறையெழுகையில்
விழும் அருவி
நிலவுக்குள் வழிந்து
உடைகையில்
நான் ஏன்
உடைந்துப் பெருகி
உன் சமிக்ஞை கண்டவனாய்
பைத்தியமானேன்?
உன் ஏரி ஏன்
ஒரு சலனமுமிலாமல்
இரவை சூடிக்கொண்டு
தியானிக்கிறது?

No comments:

Post a Comment

உயர உயரப் பறக்கும் பறவையைக் காணவும் நரம்பொன்று அறுந்து விழுந்தது சுற்றிப் பெருகும் நகரின் பதைக்கும் குரல்கள் கேளாதானேன் நீரில் மிதக்க...