இப்புலரியில்
ஒரு கோவிலிலிருந்துகண் விழிக்கும்
இவ்வூரில்
இரவெல்லாம் தூங்காத
கனக்கும் கண்களுடன்
எதை வேட்கிறேன்
எத்தனைக் காலமாய்
இப்படி விடிகிறது
எத்தனைக் காலமாய்
நான் இப்படி அமர்ந்திருக்கிறேன்
ஊர் பதைத்து பணிக்குக்
கிளம்பும்முன்
ஆயிரம் கால் மண்டபத்துக்
கூரையில்
உறக்கம் கொள்ளும்
வௌவால்களின் கனவில்
காலத்தின் எவ்விழை ஊடாடும்
No comments:
Post a Comment