Sunday, December 8, 2024

பிறவி

நான் தீர்ந்துபோவேன்
ஆனாலும்
ஒரு துளி எஞ்சும்

என்‌ நிலமெல்லாம்
நீர் கொண்டபின்னும்
வரண்ட கூழாங்கல் ஒன்று
நீருக்குள் கிடக்கும்

வனத்தின் ஆழத்தில்
உயிரில்லாத் தடமொன்று
எஞ்சியே
உள்ளது

கடலுக்குள்
கல் கட்டி
இரக்கிய பின்னும்
எஞ்சிவிடும் எப்படியோ
ஒரு மூச்சு

இப்படி எஞ்சியவைதான்
மீண்டும் மீண்டும்
அழைத்து வருகிறது

No comments:

Post a Comment

உயர உயரப் பறக்கும் பறவையைக் காணவும் நரம்பொன்று அறுந்து விழுந்தது சுற்றிப் பெருகும் நகரின் பதைக்கும் குரல்கள் கேளாதானேன் நீரில் மிதக்க...