சனி, 21 டிசம்பர், 2024

இரவுக்குள்
பெய்யும் மழையில்
உயிர்ப்பெருகி நிற்கிறது
எவ்வொளியில்‌ காட்சியாகின்றன
விழும்‌‌ துளிகள்?
இலையின் ஒளிர்
காணக்கிடைப்பது எங்ஙனம்?
யார் கவித்தது
இம்மாபெரும் இருளை
நிலத்தின் மீது
நெஞ்சின் கூடுடைத்து
காதலின் வெளிக்குள்
பாயத் துடிக்கும்
இப்பறவையை
என்ன செய்வது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நான் யார்?

சொல்‌ பிறந்தது உன்னில் சொல் சென்றோய்வது உன்னில் இடைப்பட்ட அச்சிறுகாலம் அகலென ஏந்திய சொற்சுடரொளியில் ஆற்றுவிக்கும் கண்ணீர்த்துளியால் ...