ஞாயிறு, 8 டிசம்பர், 2024

பேச்சொலி
கேட்டுக்கொண்டே இருக்கிறது
இனி இந்நிலத்தின்
சிறு துகள் விழுந்தால்
கூட இவ்வேரி
பூஞ்சை பூத்தழியும்
நீர் வடிய ஓடி
வனத்தின் கருவினுள்
நித்யமாய் நிற்கும்
பெருவிருட்சம் முன்
உடைந்து அழுதுப் பரவியது
அலை ஓய்ந்தபின்
வானம் விழுந்து
உடைத்து உள் பரவியது
சிறு துளி நீர்
அலுங்காமல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பெரும் சதுப்பு அசைவறுத்த முதலை அசைவில்லாத பறவை அசைவற்ற நீரில் மிதக்கும் அசைவேதுமற்ற சிறு பூச்சி சதுப்பின் ரீங்காரம் ஊன்றிய கால் வழி ...