ஞாயிறு, 1 டிசம்பர், 2024

நீ கொடுத்த
குடுவையில்
ஒன்பது ஓட்டைகள்
நீர்
தானியம்
நாணயம்
புகைவஸ்துக்களான
அன்பு அறம் கருணை
எதையும் சேமிக்க
முடியவில்லை
நாகங்கள் வந்து
செல்ல மட்டும்
ஏதுவாய் ஒன்பது துளைகள்
திருப்பி எடுத்துக்கொள்
பேய்க்கணமாகி
உன் சுடலையில்
வாழ்ந்துகொள்கிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஜனனம் மரணம்

அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?