இரவு
சலனமின்மையால் ஆனதுஎழுந்த புகையை
காற்று நெருக்கி நிறுத்தியது
போல்
உயிரின்
சிற்றசைவுமின்றி
கிடக்கும் இவ்விரவு
என்னுள் நிரம்பியது
என் தூரிகை
அசைய மறுக்கின்றன
அதன் சொல்
ஏங்கி அழிகிறது
குரலெழவில்லை
சதுப்பின் நிலம்
மெல்ல விம்மி மைகிறது
புலரியின் துளிபட்டு
எல்லாம் பெருகும்பொழுதில்
நான் நம்பமருக்கிறேன்
இங்குதான் இரவு
கிடந்ததென்று
No comments:
Post a Comment