Sunday, December 1, 2024

காலத்தை பிரிக்கும்
சிறு கமா ஒன்று
இரு நாட்களுக்கிடையில்
இரு வாரங்களுக்கு
இரு மாதங்களுக்கிடையில்
ஏன்
ஒரு யுகத்திற்கும்
மறு யுகத்திற்கும்
நடுவிலும் ஒரு கமாதான்

வானத்து உச்சியிலிருந்து
பார்த்தால் தெரியும்
நாம் மாய்ந்து மாய்ந்து
எழுதும் நேரக்கணக்குகளை
அதன் கமா புள்ளிகளை
அழித்து நெளியும்
ஒரு சர்ப்பம்

No comments:

Post a Comment

உயர உயரப் பறக்கும் பறவையைக் காணவும் நரம்பொன்று அறுந்து விழுந்தது சுற்றிப் பெருகும் நகரின் பதைக்கும் குரல்கள் கேளாதானேன் நீரில் மிதக்க...