அவ்வளவு அழகாய்
காலில் இல்லாதமுள்ளை எடுப்பதுபோல்
திரும்பி நோக்குகிறாள்
சகுந்தலை
துஷ்யந்தனை
சற்று அவசரமாய்
அன்றாடம் தைத்த முட்களை
ஒவ்வொன்றாய்
எடுத்தானபின்
செல்லவேண்டும்
வனத்தின் ஆழத்து உரையும்
என் காதலைத் தேடி
அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக