வானத்தை பார்க்க
நினைக்கும்போதெல்லாம்ஏரியைப் பார்க்கிறது
விருட்சம்
தொட்டுப்பார்க்கும்
குழந்தையின் ஆவலுடன்
ஒரு இலையை கீழ் கிடக்கும்
வான்தொட
உதிர்த்தது
பரவியது ஏரிப்பரப்பு
மென் அலையலையாய்
விருட்சத்தின் வானில் எழுந்தது
அகாலத்தின் பேரலை
அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக