நீர் கோக்காத
ஒரு வரண்டகண்களைக்
கண்டேன்
பின் எவ்வதிர்விக்கும்
இமைக்கா விழிகள்
ஒன்றைக் கண்டேன்
நீர்மைகொண்டுருகும்
கருணையால்
ஊடுருவி அகம் தொடும்
கண்கள் கண்டேன்
வெறுப்பாகி
கரிந்து உள் எரியும்
கண்களைக்
கண்டேன்
நித்யத்தை
நோக்கிச்செல்லும்
லயத்தில் நிற்கும்
அசைவற்ற நெற்றிவிழி
கண்டேன்
எல்லாம் கண்டபின்
ஒரு மலரைக்கண்டு
பூரிக்கும் கண்களை
எனதென்று
அள்ளி சூடிக்கொண்டேன்
No comments:
Post a Comment