வனஇருளின் ஒளிர்
வழிந்து ஓடையாகும்சலசலக்கும் அழைப்பில்
நீங்கிவிடுகிறேன்
இருக மூடிக்கொண்டிருக்கும்
இந்நகரத்தினை
என் குடில்
ஒரு மாயக்கம்பளமாகி
எழுந்து பறவைகளைப் பின் தொடர்கிறது
நான் சென்றாகவேண்டும்
மையத்திலிருந்து மதுரம் கசிந்து
காடே பித்தாகும் இரவுகளில்
நான் கனமான இவ்வுடல்
சுமந்தலைவேனில்லை
கானெறியும் தூண்டில்
கூர்சுளுக்கியை ஆசையாய்
நெஞ்சில் கோத்துச் செல்கிறேன்
உயிர் என்பது
துளிஎஞ்சாமல் அழியத்தானே?
No comments:
Post a Comment