அன்றாடமென்பது
பறவையொலியும்இலையின் கதையாடலும்
அணில் கீறிச்சிடலும்
அவ்வப்போது
வரும் எருதின் வால்சுழற்றலும்தான்
இன்று ஒரு யானைக்கூட்டம்
என் குடில் முன் வந்தது
மூதாட்டி காதுலைத்து
நோக்கினாள்
மரங்கள் சில உலுக்கப்பட்டன
பிண்டங்கள் விழுந்தன
சில உரையாடல்கள்
அடிக்கடி வருவதாய் சொன்ன
மூதாட்டியை
வழியனுப்பிவிட்டு
அகலுக்கு
எண்ணையிட்டு
அமர்ந்துகொண்டேன்
சுவரில் வேழத்து நிழல்
விழுவதை குருவி
சுட்டிக்காட்டியது
No comments:
Post a Comment