இன்று உடல் துண்டானேன்
மலையை அடித்துச் செல்லும்பேரலை இச்சிறு
உயிரின் மேல்
ஏன் பிரவகித்தது?
சலனமில்லா
இரவெழுந்த வனம் நோக்கி
உயிர்ப்பிரக்ஞையின்றி
நிற்கிறேன்
சன்னதமெடுத்தாடும்
காற்றால் மலையை
அசைக்க முடியவில்லை
ஆதியாழங்களிலிருந்து
வந்து விழுகிறது
எரிகல்லொன்று
வனம் பற்றி
கூடு கருக
ஜ்வாலையை அள்ளிப்
போர்த்திக்கொள்கிறது
பறவை
எரிபற்றி உடைந்து விழும்
கிளையில் எழுகிறது
அப்புள்ளின் தீக்குரல்
No comments:
Post a Comment