ஒவ்வொருவராய்
சுடலைக்குக் கொடுத்தேன்உன் எரிதான் அள்ளி
உண்டது
நடனமிட்ட ஜ்வாலையின்
தீநா மறக்கவேயில்லை
இறக்கும் வயதா இது
எனும் வாதங்கள் இல்லை
ஆழ்கிணற்றுள்
சென்று விழும் கல்லென
காலம் விழுந்து மறைகிறது
வானத்தின் பேரேட்டில்
பூமியின் கணக்குதான் என்ன
அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக