இரவின் சருகுகள்
என் சிறு அசைவையும்சப்திக்கின்றன
இரவின் மலர்களோடு
மலராய்
படம் விரித்த நெளியுடல்
நிற்கிறது
மலரின் பரிமளத்தினூடே
நஞ்சின் நெடி
வீசும் இவ்விரவில்
நான் நிசப்தமான வானை
பெருகும் சுவாசமெடுத்து
நிறைத்துக்கொள்கிறேன்
பெரும் சதுப்பு அசைவறுத்த முதலை அசைவில்லாத பறவை அசைவற்ற நீரில் மிதக்கும் அசைவேதுமற்ற சிறு பூச்சி சதுப்பின் ரீங்காரம் ஊன்றிய கால் வழி ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக