Sunday, December 1, 2024

இம்முறையும்
முழுமைகொள்ளாமல்
நீங்கிப்போவதை
சொல்லின்றி
பார்த்துக்கொண்டிருக்கிறேன்
இனி நாம்
மீண்டும் சந்திக்க
ஒரு உலகம் உருவாக வேண்டும்
அதில் உயிர்கள்‌ பெருக வேண்டும்
மானுடம் செழிக்க வேண்டும்
நான் ஏழேழு பிறவிகள் கடக்கவேண்டும்
பின்
காலம் ஒரு அம்பெய்து
என்னை உன் வனத்தில்
வீழ்த்தவேண்டும்
காற்றில் அலுங்கும்
இலை விலக
உன் கிரணமொன்று
என்னிடம்
ஒரு சொல்லுறைக்கும்
நான் நீ மீண்டும் வருவதை
சொல்லின்றி
பார்த்துக்கொண்டிருப்பேன்

No comments:

Post a Comment

உயர உயரப் பறக்கும் பறவையைக் காணவும் நரம்பொன்று அறுந்து விழுந்தது சுற்றிப் பெருகும் நகரின் பதைக்கும் குரல்கள் கேளாதானேன் நீரில் மிதக்க...