பிறப்புக்குழி நழுவி
வெளிவிழுந்த கணம் கூண்டடைந்த பறவைதான்
இன்றும் வழக்கம்போல்
உடலெல்லாம்
கீறல் ஓவியமிட்டுள்ளது
ஆகாசமொளிரும் நெருப்பை
அகலில் ஏற்றி
வைத்தேன் கூண்டுக்குள்
படபடப்பு குறைந்து
சுடரின் நலுங்களில்
லயித்தது
பின் அப்பறவைதான்
காண்பித்துக்கொடுத்தது
ஆகாசத்தை பிறப்பிக்கும்
கருவை
No comments:
Post a Comment