சலிக்கத் தேடிவிட்டேன்
குடுவையைஒன்று கூட எஞ்சவில்லை
கானகத்தின்
ஆழத்துக்குச் செல்லவேண்டும்
நிலவு ஓயாமல்
அரற்றும்
நித்யமான தனிமையில்
ஓடையில்
வானத்தின் வெளிர்
ஒழுகும் போழ்தில்
நீ அருளியது
சொல்லாக
எதிர்பாரா கணமொன்றில்
மலரும்
வானம் மட்டும்
இருக்கும்
இந்த குடுவைக்குள்
No comments:
Post a Comment