இரவுக்குள்
குளிர் பரவுவது போல்பிரிவு என்னை
வியாபிக்கிறது
என்றோ கண்ட
அயல்நிலத்துப் பறவையை
நினைத்துக்கொள்கிறேன்
பாதத்தை குளிராய்
அணைத்து மீண்ட
அலைகளை
நினைத்துக்கொள்கிறேன்
யாரோ வீட்டின்
ஜன்னல் கண்ணாடியில்
முகம் பார்த்தது
நினைவெழுகிறது
இந்த குளிர் மிக்க
இரவில்
குளிர்காயும்
நெருப்பின் புகையைப்போல்
நினைவுகள் எழுந்து மறைகின்றன
தீயின் ஜ்வாலைகள்
அணையும் நாட்களில்
பிரிவின் துணையுமின்றி
தனித்தலையும் குளிரால்
சூழப்படுவேன்
No comments:
Post a Comment