மற்றபடி இம்மாதத்தில் எஞ்சிய
மூன்று நாட்களை அடக்கியிருக்கும்காலன்டரின் மூன்று சதுரத்துக்குள்
பல்லாயிரம் கணக்குகள் முடிக்கப்படும்
பலநூறு வெற்றிகளும்
சரிசமமான தோல்விகளும் நிகழும்
உயிரின் ஜனமும் மரணமும்
என்றும் போல் கோடானகோடி
நான்கு கோடுகள் கொண்ட
வெறும் கட்டத்துக்குள்
முடிவிலா கோடுகள்கொண்டு
விரிந்து விரிந்து நிற்கிறது
கணமொன்றில் உரையும் காலம்
No comments:
Post a Comment