அளிக்கப்பட்ட
இன்பத்தின் அலைகள்ஓய்ந்தடங்கிவிட்டன
சலனங்களின்
சஞ்சலங்களின்
நதி அழைக்கிறது
ஆணவத்தின் துடுப்பிட்டு
அலையாடிச்செல்லவேண்டும்
நஞ்சின் துடி ஒலிக்கும்
நிலத்துக்கு
பின் அளிக்கப்படும்
மிகச்சிறியகாலத்துக்கு
மிகச்சிற்றின்பம்
அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக