வானம் சிகையாக
இரவை சூடிநிற்கிறாய்
என் அகத்தை
உன் இரவின் ஏரிக்குள்
வீசி எறிந்தபின்
ஏரி ஆழத்து வளைக்குள் சென்று
பகலெல்லாம்
புதைந்துகொள்கிறேன்
அந்தியின் கடைசிப்புள்
அழைக்கும் போது
இரவு வான் நோக்கி
ஆழம் விட்டெழும்
குமிழியாய் அகம்
உயர உயரப் பறக்கும் பறவையைக் காணவும் நரம்பொன்று அறுந்து விழுந்தது சுற்றிப் பெருகும் நகரின் பதைக்கும் குரல்கள் கேளாதானேன் நீரில் மிதக்க...
No comments:
Post a Comment