நள்ளிருளில்
நிலவின் பொழிவில்இச்சைகளின் பெருவனம்
நிலவொளியில் புகைத்திரட்டாய்
அலையும் பேய்கள்
துளி சஞ்சலமுமின்று
இச்சையில் சுழலும்
உருத்தோற்றங்கள்
சதுப்பின் சேற்றுக் குழம்பலின்
ஆழத்தில் அசையும்
தினவுடல்கள்
காமத்தின் தீநா பறக்கும்
சர்ப்பமொன்றின்
மூச்சு வனத்தை அசைக்கிறது
பின் வனப்பேய்களின்
உச்சாடனத்தினுடே
எழுந்தது
மதுரமேயான ஓர் நஞ்சு
No comments:
Post a Comment