ஞாயிறு, 8 டிசம்பர், 2024

யாருக்கும்
சொல்லாமல்
தேக்கிவைத்துள்ளேன்
உதயத்தின் கோடிக்கிரணங்கள்கூட காணமுடியாத
இரவின் ஆன்மத்தில்
ஒளித்துள்ளேன்
உன்‌ வானம்
ஏரியை மெல்லத் தொடுகையில்
சிகைபிடித்திழுத்து
கழுத்தறுந்து வீழ்வேன்
முற்றழிவேன்
யாருமறியாமல்

தீ ஜ்வாலையாகும்
உன் அந்திக்குள்
கரும்புள்ளியாய்
கரையும்‌ புள்
அறியும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஜனனம் மரணம்

அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?