இத்தனை ஆயுள் ஏன்
காத்திருந்தாய்?மரணத்தின் கூர்
அலகில் தூக்கிச்செல்லப்படுகையில்
ஏன் அத்தனை ஏக்கமான கண்ணீர்?
காதலின் ஒரு துளியை
சுமந்தலையும் தாகம்
ஓயப்போவதேயில்லையல்லவா?
வெடிப்பொலிக்கு
புற்கூட்டம் விருட்சம்
நீங்கிப் பின் அடைவதுபோல்
ஒரு சுழற்சி.
ஊஞ்சல் ஏன்
இருப்புக்கும் இருப்புக்கும்
பறக்கிறது?
சிறு குமிழாய் துடிக்கும்
ஊற்றை பறவைகள்
ஏன் சட்டை செய்யவேயில்லை?
அசையா மலையொன்றின்
ஆன்மத்தை ஊடறுத்து ஏறும் இன்மையின் கயிறொன்று பற்றித்தான்
சுழல்கிறது
நம் இருப்பின் மேகங்கள்.
No comments:
Post a Comment